Thursday 10 March 2011

கணினியின் பயன் (ஆண்டு 4)

      2020 தூர நோக்குச் சிந்தனையை நோக்கிச் செல்லும் நம் நாட்டில், பல துறைகள் மற்றும் பலரின் மத்தியிலும் கணினிப் பீடு நடைப்போட்டுக் கொண்டு அதன் பங்கையாற்றுகிறது. அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளில் அரியதாகத் திகழ்வது கணினியாகும். ஆங்கிலத்தில் இதை 'கம்ப்யூட்டர்' என்பர்.
       கணினியை 'கொன்ராட் ஜீஸ்' என்பரால் இருபதாம் நூற்றாண்டின் இடையில் (1940-1941) கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருவி எல்லாத் துறைகளிலும் பயன்படுத்துகின்றது. கல்வி, மருத்துவம், வாணிபம், தொழில் துறை, வங்கிகள், விண்வெளி ஆகிய துறைகளில் கணினி மக்களுக்குப் பெருந்துணைப் புரிகிறது.
           கல்வியில் கணினியின் பங்கு அளப்பரியது. இன்றையக் காலக் கட்டங்களில் கற்றல் கற்பித்தலில் கணினிப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், கற்றல் கற்பித்தலில் சுலபமாகிறது மற்றும் மாணவர்கள் கணினிவழி பாடங்களை மகிழ்ச்சியாகக் கற்கின்றனர். 
            முன்புக் காலங்களில் நோயாளிகளுக்கு உள்ள நோயைக் கண்டறிய சில காலங்கள் தேவைப்படும். அக்குறையை இன்று கணினி தீர்த்து வருகிறது. நோயை நொடிப் பொழுதில் கண்டுபிடிக்கும் ஆற்றல் கணினிக்கு உண்டு.
       இதைத் தவிர்த்து நாம் கணினிவழி இணையத்தைப் பயன்படுத்தி ஆங்காங்கே உள்ள நண்பர்களைத் தொடர்புக் கொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி, உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகள் கண் எதிரே வந்து சேரும். நமக்குத் தேவைப்படும் தகவல்களை நொடிப்பொழுதில் விரிவாகவும் தெளிவாகவும் அறிய முடியும்.
          இன்று வங்கியில் நாம் சேர்க்கும் பணத்தை எந்நேரத்திலும் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் கணினியின் துணையுடன் வங்கிகளில் 24 மணி நேர சேவையைப் பயன்படுத்திப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்வெளிக்குத் துணைக்கோளங்கள் அனுப்புவதும் கணினியாலே என்று கூறிக் கொள்வதும் மிகையாகாது.
          ஆகவே, கணினியால் மனிதர்கள் நிறைய பயன் அடைகிறார்கள். கணினி இவ்வுலகத்தையே ஆட்கொண்டு ஆட்சி செய்கிறது. கிணற்றுத் தவளையாக இருந்த மனிதன் உலகத்தைப் பார்க்க கணினி உதவுகிறது. கணினியின் பயன்பாட்டை நன்கு உணர்ந்து அதன் வளர்ச்சிக்கேற்ப நம்மையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.