Monday 14 March 2011

நான் ஓட்ட விரும்பும் விநோத மிதிவண்டி

           மாலைச் சூரியன் மேற்கில் மறைந்துகொண்டிருந்தது. இதமான தென்றல் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாலா புறமும் பச்சை பசேலென்ற மரங்களும் செடிகளும் கொடிகளும் கண்களுக்குக் குளிர்ச்சி ஊட்டிக் கொண்டிருந்தது. மரத்தில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்த வாரு என் என்னலைகள் நான் ஓட்ட விரும்பும் விநோத மிதிவண்டி எப்படியாய் இருக்க வேண்டும் என சிந்தனை பட்டாம் பூச்சியா சிறகடிக்கத் தொடங்கினது.
            நான் ஓட்ட விரும்பும் மிதிவண்டிக்குப் பல விநோதத் தன்மைகள் இருக்குமாறு திட்டமிடுவேன். அதன் பாகங்கள் யாவும் மற்ற மிதிவண்டியில் இருப்பதைக் காட்டிலும் என் விநோத மிதிவண்டியில் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவற்றில் அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகமும் என் நினைவலைகளை அறிவாற்றலையும் கொண்டு என் விநோத மிதிவண்டியை உருவாக்குவேன். 
                    நான் ஓட்ட விரும்பும் விநோத மிதிவண்டி என்னுடைய கைரேகை பட்டால் மட்டும் இயங்கும் சக்தி உள்ளதாக அமைப்பேன். மேலும், நான் எழுப்பும் ஓசையைக் கேட்டவுடன் என் அருகில் வரும் ஆற்றல் உள்ளதாகவும் அமையப்பண்ணுவேன்.
                       அதுமட்டுமின்றி, மழை மற்றும் வெயில் காலங்களில் என்னைப் பகைவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதுப் போல என்னைப் பாதுகாக்கும் ஆற்றலை அதில் புகுத்துவேன். நான் விசையைத் தட்டிய உடனே, அது ஒரு நொடிப் பொழுதில் மயில் தன் தோகையை விரிப்பது போல, ஓர் அதிசய இறக்கையை விரித்து என்னை மூடிக் கொள்ளும். இதன் வழி, நான் மழையில் நனையாமலும் வெயிலில் காயாமலும் பாதுகாக்கப்படுவேன்.
                       நான் உருவாக்கும் மிதிவண்டிக்கு உருமாறும் ஆற்றல் இருக்கும். அதனால், மிதிவண்டியை நிறுத்தி வைக்கும் பிரச்சனை ஏற்படாது. அதைச் சிறியதாக்கி எங்குச் சென்றாலும் அதைத் தூக்கிச் செல்வேன். அதனால் என் மிதிவண்டி களவுப் போகாமல் பாதுகாப்பாக இருக்கும்.
                        நான் ஓட்ட விரும்பும் மிதிவண்டி ஓர் இடத்திற்கு விரைந்து செல்லும் ஆற்றலையும் பெற்றிருக்கும். ஆதாவது மிதிக்காமலேயே, விசையைத் தட்டியவுடன் தானே பறந்து செல்லும் ஆற்றல் பெற்றிருக்கும். இது வாகன நெரிசலைத் தவிர்க்க உதவும்.
                           இத்தகைய மிதிவண்டியை உருவாக்க நான் சிறந்து படிப்பேன். அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாகி இம்மிதிவண்டியைச் சிறந்த முறையில் உருவாக்குவேன்.


No comments:

Post a Comment